Connect with us

இலங்கை

அடை மழையினால் அடைப்புக்குள்ளான வடிகாண்களை துப்பரவு செய்யும் கல்முனை மாநகர சபை ஊழியர்கள்.

Published

on

காலநிலை மாற்றத்தினால் அம்பாறை மாவட்டத்தில் பரவலாக தொடர்ச்சியாக பொய்து வரும் அடை மழையினால் அதிகமான தாழ் நிலங்கள், வயல் நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதுடன் அதிகமான மக்கள் இக்கொரோனா தாக்க நிலைமைகளிலும் கடும் இக்கட்டான சூழ் நிலையிலும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலமையை கருத்திற் கொண்டு கல்முனை மாநகர சபையின் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி, ஏ.எம்.றகீப் அவர்களின் விஷேட பணிப்புரைக்கமைய அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மாநகர சபையின் பொது வசதிகள் பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.எம்.அஹதின் கண்காணிப்பின் கீழ் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் உள்ளேயும் வளவுகளிலும் காணப்படும் வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது டன், அடைப்புக்குள்ளான வடிகாண்களை துப்பரவு செய்யும் பணிகளிலும் மாநகர சபையின் ஊழியர்கள் மும்முரமாக செயற்படுவதை காண முடிகிறது.

இதனால் இப்பிரதேசத்தில் முன்னர் காணப்பட்ட வெள்ளநீர் மட்டம் ஒரளவு குறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இருந்ததும்  இக்காலநிலையின் தாக்கம் நீடிக்குமாகயிருந்தால் இப்பிரதேசங்கள் வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்படும் நிலமை உருவாகலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *