Connect with us

சர்வதேசம்

அண்டை நாடுகளை மிரட்டும் சீனா

Published

on

இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சீனா செயல்படுவது கவலை அளிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் எமிலி ஜே ஹார்னி, கூறியதாவது: அண்டை நாடுகளை மிரட்டும் வகையில் சீனா தொடர்ந்து செயல்படுவது, அமெரிக்காவுக்கு கவலை அளிக்கிறது. எல்லைப் பிரச்னை குறித்து, இந்தியா – சீனா இடையே நடக்கும் பேச்சு குறித்து, அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது.

இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சு நடத்தி, பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். இந்திய – பசிபிக் கடல் பிராந்தியம் அனைத்து நாடுகளுக்கும் முக்கியமானது. இதில், சீனாவின் ஆதிக்க முயற்சிக்கு எதிரான நட்பு நாடுகளுக்கு, அமெரிக்கா என்றும் துணை நிற்கும்.இவ்வாறு, அவர் கூறினார். அமெரிக்காவில், அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், முதன் முறையாக, சீனா குறித்து கடுமையான கருத்து, தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *