Connect with us

இலங்கை

அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் கிராமம் “சௌபாக்கியத்தின் நோக்கு” தேசிய உற்பத்தி கிராமமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் அரசின் “சௌபாக்கியத்தின் நோக்கு” வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் இலக்குடன் “உற்பத்தி கிராமங்களை” (நிஸ்பாதன கம்மானய) கட்டியெழுப்பும் ஆரம்ப நிகழ்வு (03.03.2021) அட்டப்பள்ளம் கிராமத்தில் நடைபெற்றது.

கிராம மட்டத்தில் காணப்படும் வளங்களை பயன்படுத்தி உற்பத்திகளை அதிகரிக்கச் செய்வதுடன் அவற்றிற்கான சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுப்பது சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இதன்மூலம் உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதும் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்கைத்தரத்தை  மேம்படுத்துவதும்; முக்கிய அம்சங்களாகும்.

அட்டப்பள்ளம் கிராமத்தை மையப்படுத்தி,  “கோழிப் பண்ணை அபிவிருத்தி கருத்திட்டம்” முன்னெடுக்கப்படுகிறது. இதன் ஊடாக கோழி வளர்ப்பு, கோழி இறைச்சி, முட்டை உற்பத்தி மற்றும் அதனூடான உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு இக்கிராமம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் ரி.எம்.அன்சார்  தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில்  மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி. அனீஸ், நிந்தவூர் பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிக்கார், கணக்காளர் எஸ்.எல்.சாஜீதா பர்வின், அம்பாறை பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஆர்.எம்.நிஸாம் உள்ளிட்ட நிந்தவூர் பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள், பிரதேசத்தின் கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரும் இதில் கலந்து கொண்டனர்.