Connect with us

இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் கடும் மழை, தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

Published

on


அம்பாறை மாவட்டத்தின் பெய்துவரும் அடை மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக  தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கிவருகின்றன.

நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை, காரைதீவு நிந்தவூர் போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ளநீர்  நிரம்பிக் காணப்படுவதுடன் வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில் தாழ் நிலங்களில் தொடர்சியாக வெள்ள நீர் தேங்கி கிடப்பதால் டெங்கு நோய் பெருகக்கூடிய அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.