Connect with us

இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் கடும் மழை, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published

on

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் கடந்த ஒரு வார காலமாக  மாலை வேளைகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது கடும்; மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

இதனால் மாவட்டத்தின் நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, பெரிநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ளநீர் பெருக ஆரம்பித்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்க உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வயல் நிலங்களும் நீரில் மூழ்கி வருகின்றன.

சில தாழ்நிலப் பகுதிகளில் தொடர்சியாக வெள்ள நீர் தேங்கி கிடப்பதால் டெங்கு நோய் பெருகக்கூடிய வாய்ப்பும் உள்ளன.