Connect with us

இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் தாழ்நில வீடுகளுக்குள் புகுந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் ஆரம்பம்

Published

on

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பொய்து வரும் அடை மழையினால் அதிகமான தாழ் நிலங்கள், வயல் நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. சிலர் வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர்களின் வீடுகளில் இடம்பெயர்துள்ளனர்

பாதிக்கப்பட்ட மக்களின் நிலமையை கருத்திற் கொண்டு கல்முனை மாநகர சபையின் முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி, ஏ.எம்.றகீப் அவர்களின் விசேட பணிப்புரைக்கமைய அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கல்முனை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தாழ்நில வீடுகளுக்குள் புகுந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை வடிகாண்களை துப்பரவு செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *