Connect with us

இலங்கை

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு

Published

on

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை BOT முறையில் இந்தியா மற்றும் ஜப்பானிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் திட்டம் இன்று (03) பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகம் மற்றும் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

கிழக்கு முனையத்தை அபிவிருத்திசெய்வது தொடர்பாக 2019ம் ஆண்டு மே மாதம் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் என்பதே இந்தச்சந்திப்புக்களின் போது இந்தியத்தூதுவர் வலியுறுத்திய செய்தியின் சாராம்சமாகும் என த ஹிந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை 51% சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் அதேவேளை இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக 49 % சதவீதமான பங்குகளைக் கொண்டிருக்கும்.

கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 100 வீதம் துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் முன்னெடுக்கப்படும் என இலங்கை பிரதமர்அறிவித்திருந்தாலும், பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளதாக இந்தியாவிற்கு அறிவிக்கப்படவில்லை என இன்றைய தஹிந்து பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *