Connect with us

இந்தியா

ஆகஸ்ட் 2 ஆம் திகதியில் இருந்து 10 முதல் 12 வகுப்பு வரை பாடசாலைகள் திறப்பு

Published

on

இமாச்சல் பிரதேசத்தில் ஆகஸ்ட் 2 ஆம் திகதியில் இருந்து 10 முதல் 12 வகுப்பு வரை பாடசாலைகளை திறக்க மாநில அரசு அனுமதி அனுமதியளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. முதல் இரண்டு அலைகளை எதிர்கொண்ட நிலையில் மூன்றாம் அலையும் வரும் என்று நிபுணர்கள் கணித்திருப்பதால் பாடசாலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டி வந்தன.

பல்வேறு மாநிலங்களில் மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் திகதியில் இருந்து 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடசாலைகளை திறக்க அனுமதி அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *