Connect with us

இலங்கை

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பிராந்திய அலுவலகங்கள் நாளை திறப்பு

Published

on

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட காலி, குருநாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இயங்கிவரும் பிராந்திய அலுவலகங்களை நாளைய தினம் (26) திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை விநியோக நடவடிக்கைகளுக்காவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (26) காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை குறித்த அலுவலகங்களை திறந்து வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.