Connect with us

இந்தியா

ஆப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய நான்கு பேருக்கு உருமாறிய கொரோனா

Published

on

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது, உருமாறிய கொரோனா புது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவில் இம்மாத தொடக்கத்தில், பிரேசிலை சேர்ந்த நபர் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். தற்போது அதனைத் தொடர்ந்து, ஆப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய நான்கு பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அவர்களுடன் பயணித்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *