Connect with us

இலங்கை

ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேர் கொண்ட குழு

Published

on

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு ஆயுதங்களுடன் சென்ற குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

நேற்றிரவு 9.35மணியளவில் பாலமீன்மடு,புதிய எல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் இந்த தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்சென்றதாக வீட்டின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வாள் மற்றும் பொல்லுகளுடன் வந்தவர்கள் வீட்டின் கேற்றினை உடைத்துக்கொண்டு உள் நுழைந்தபோது வீட்டின் உரிமையாளர்கள் வீட்டுக்குள் சென்று கதவினை மூடிய நிலையில் வீட்டின் முன்பாக தரித்து நின்ற மோட்டார் சைக்கிள்கள் இரண்டினை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டின் ஜன்னல்களை உடைத்து அதன் ஊடாக வாள்களை நீட்டி அச்சுறுதல் விடுத்ததாகவும் வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்