Connect with us

சர்வதேசம்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ

Published

on

ஆஸ்திரேலியாவின் சுவான் நகரம் மற்றும் முன்டரிங், சிட்டரிங், நார்தாம் ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். தீயை அணைக்க 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. காட்டுத் தீயில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது.

சுமார் 7 ஆயிரம் ஹெக்டர் காட்டுப்பகுதி தீயில் எரிந்துள்ளன. தீ வேகமாக பரவுதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *