Connect with us

சினிமா

இணையத்தில் வைரலாகும் கேஜி எப் இரண்டாம் பாக டீசர்

Published

on

யாஷ் நடித்துள்ள கேஜி எப் இரண்டாம் பாக டீசர் இணையத்தில் 60 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1, கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். 

இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது.

இப் படத்தின் டீசர் வெளியாகி ஒரு நாளுக்குள்ளாகவே இதுவரை இந்த டீசரை 6 கோடி பேர் பார்த்துள்ளனர். மேலும் இந்த டீசர் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.