Connect with us

இந்தியா

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வீழ்ச்சி

Published

on

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருதாக சுகாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தவகையில் கேரளாவில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) 6 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் திருவனந்தபுரம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 43211 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம் 38732 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 4 இலட்சத்து 9 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் 641 பேர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 22 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *