Connect with us

இலங்கை

இயந்திரமயமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருவது ஆபத்து

Published

on

இயந்திரமயமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருவது ஒரு ஆபத்தினை கொண்டு வரும் என்பதனை ஆனேகர் புரிந்து கொள்ளவில்லை என ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கலாசார பேரவையின் ஏற்பாட்டில் பிரதேச கலை இலக்கிய விழா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாங்கள் இன்று இயந்திரமயமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகின்றோம். எல்லோரும் இலத்திரணியல் ஊடகத்தினையை நாடிச் செல்கின்றார்கள். இது ஒரு ஆபத்தினை கொண்டு வரும் என்பதனை ஆனேகர் புரிந்து கொள்ளவில்லை.

கலையை வளர்ப்பது என்பது தொடர்பில் கேள்வி எழுகின்ற பொழுது ஒவ்வொருவரும் இணைந்து தான் அதனை செயற்படுத்த முடியும். ஒவ்வொரு இனத்திற்கும் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்கள் வேறு வேறாக இருக்கின்றது. அதேவேளை அவை ஒன்றிணைந்;தும் இருக்கின்றது. எங்களுடைய இருப்பை நாங்கள் வளர்க்க வேண்டுமாக இருந்தால் எங்களது கலை, கலாசாரம், பண்பாடு பின்பற்றப்பட வேண்டும். அவை வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

கலை, கலாசாரம், பண்பாடுகளில் ஈடுபடுவதில் இளம் சமுதாயம் குறைந்து காணப்படுகின்றது. மூத்த எழுத்தாளர்களே எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இளம் எழுத்தாளர்கள் உருவாவதற்கு முன்வருவதாக தெரியவில்லை. இவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது என்றார்.

 உதவி பிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர், சமுர்த்தி தலைமைய முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், முன்னாள் வட கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் எழுத்தாளருமான எஸ்.எல்.எம்.ஹனீபா, கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.நளீம், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.யூ.எம்.அப்துல் காதர், செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 கலாசார அலுவல்கள் திணைக்களம் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து ஓட்டமாவடி பிரதேச செயலகம் நடாத்திய பிரதேச கலை இலக்கிய விழா நிகழ்வில் பிரதேச கலைஞர்களதும், பாடசாலை மாணவர்களதும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு, கலாசார விழாவை முன்னிட்டு நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

 இதன்போது ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகரும், பாடகருமான எம்.ஐ.எஸ்.வஹாப் என்பவரினால் வெளியிடப்பட்ட இறுவெட்டினை பிரதேச செயலாளர் வீ.தவராஜாவிடம் கையளித்தார்.