Connect with us

இலங்கை

இருவு நேரம் பாராது ‘திரிய பியச’ வீடுகளை கையளித்த அதிகாரிகள்

Published

on

‘நாட்டுக்காக ஒன்றினைவோம்’ எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சமுர்த்தி திணைக்களத்தினால்  முன்னெடுக்கப்பட்ட ‘திரிய பியச’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று (03) வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு  நேற்று (09)  இரவு நேரத்தில் நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தில் (08) தாய்மையை வெல்லும் பல்வேறு நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றன. குறித்த நினத்தில் பெண்களை கௌரவிக்கும் நோக்கில் வீடுகளை கையளிக்க

மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை சமூர்த்தி சமூதாய அடிப்படை வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.எம்.முபீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூர்த்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பதில் பணிப்பாளரும் மேலதிக மாவட்ட செயலாளருமான வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இரவு 8.00 மணியையும் தாண்டிய நிலையில்  வீடு வீடாக சென்று வீடுகளை திறந்து பயனாளிகளிடம் கையளித்தார். 
இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி,  சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா உட்பட திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

‘திரிய பியச’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஓவ்வொரு வருடமும் பிரதேச செயலத்தின் சமூர்த்தி திணைக்களத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவ்வாறு வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.