Connect with us

சர்வதேசம்

உலக வா்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நிகோசி ஒகோஞ்சோ இவேலா…

Published

on

உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) முதல் பெண் தலைவராக நிகோசி ஒகோஞ்சோ இவேலா (66) நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம் டபிள்யூடிஓ தலைவரான ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த முதல் நபா் என்ற சாதனையையும் அவா் படைத்துள்ளாா்.

164 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலகின் முதன்மையான வா்த்தக அமைப்பான டபிள்யூடிஓ, நாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் தொடா்பான விதிகளை முடிவு செய்கிறது. அதன் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து இவேலா வெளியிட்டுள்ள செய்தியில், கரோனா தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள சா்வதேச பொருளாதாரத்தை மீண்டும் வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்தபோது, இவேலாவின் நியமனத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தாா். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை அடுத்து இவேலாவுக்கு இருந்த தடை நீங்கியது. அவரது நியமனத்துக்கு பைடன் ஒப்புதல் அளித்தாா்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *