Connect with us

இலங்கை

எங்களுடைய பணியை எந்தவிதமான குறையும் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பது எங்களுடைய அவாவாக இருக்கிறது.

Published

on

எங்களுடைய பணியை எந்தவிதமான குறையும் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பது எங்களுடைய அவாவாக இருக்கிறது. அந்த வகையில் சமூகத்தில் பலவிதமான அவதானிப்புக்கள் இருக்கிறது  அந்த அவதானிப்புகளை சரிவர செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சிறுவர்
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பிராந்திய சிறுவர் பாதுகாப்பு  இல்ல திறப்பு விழா சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ்.சிவகுமார் தலைமையில் கல்முனைஇஸ்லாமாபாத்யில்நடைபெற்றது.

இந்த திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில்.
இந்த சிறுவர் பாதுகாப்பு இல்லத்தை இவ்விடத்தில் நாங்கள் அமைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

அம்பாறை, மட்டக்களப்பு கரையோர பிரதேசங்களில் வசிக்கும் நடத்தை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் நீதி மன்றத்தால் புனர்வாழ்வு அளிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்ட சிறுவர்கள் போன்றோர்அம்பாறை மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

அப்படி அனுப்பி வைக்கப்பட்ட சிறுவர்களிடம் மொழிப் பிரச்சினைகள் மற்றும் கலாசாரம் போன்ற பல பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. அப்படியான பிரச்சினைகளை இல்லாமல் செய்யவே இவ்விடத்தில் இந்த இல்லத்தை ஆரம்பித்திருக்கிறோம் என்றார்.

சுமார் 30க்கும் மேற்பட்ட சிறுவர்களை தங்கவைத்து பராமரிப்பதற்கான சகல வசதிகளும் தற்போது இங்கு ஒழங்குபடுத்தப்பட்டுள்ளன. இவர்களுக்குத் தேவையான மகிழ்ச்சியான, பாதுகாப்பான மற்றும் சந்தோஷமான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவர்கள் படிப்பதற்குரிய புத்தகங்கள் கொடுக்கப்படுவதுடன் ஒரு நூலகமும் இங்கு உருவாக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
தெரியாத வயதில் புரியப்படுகின்றசிறுசிறு தவறுகளினால் இச்சிறுவர் இல்லங்களுக்கு இவர்கள் வரவேண்டியிருக்கிறது. இருந்தும் அதன் மூலம் அவர்களை திருத்தி சமூகத்தில் சரியாக வாழ்வதற்காகவே இவ்வாறான சிறுவர் பராமரிப்பு இல்லங்களை அமைக்கின்றோம் என்றார்.

இவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அவர்களுக்கு தொழில் ரீதியான பயிற்சிகளையும் வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு முன்னர் யாழ்ப்பாணம் கைதடி சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். எதிர்காலத்தில்கிழக்கு மாகாணத்தில் இதற்கானஒரு மத்திய நிலையத்தை அமைக்க இடங்கள் தேடிய போது மட்டக்களப்பு மாவட்ட கிரான் பகுதியில் பத்து ஏக்கர் காணி கிடைத்துள்ளது. இதற்கான நிர்மாண வேலைகளை மிக விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்கள  கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி றிஸ்வானி றிபாஸ், உதவி ஆணையாளர் சரணியா சுதர்சன், கல்முனை சிறுவர் நன்னடத்தை பொறுப்பு அதிகாரி ரி.மதியழகன், களுவாஞ்சிக்குடி பொறுப்பு அதிகாரி எம்.என்.எம்.றிபாஸ், உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.