Connect with us

அறுசுவை

எலும்பை வலுவாக்கும் உளுந்து லட்டு

Published

on

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து மாவு – 1 கப் தேங்காய் துருவல் – 1 கப்
நாட்டு சர்க்கரை – 1 கப்
சாக்கோ சிரப் – 100 மில்லி
வெள்ளை எள்ளு  பொடித்து வறுத்தது – 1 டீஸ்பூன்
நெய் – சிறிதளவு

செய்முறை

முதலில் வாணலியில் கருப்பு உளுந்து மாவை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து  மணி நேரம் வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் அடுப்பை குறைந்த தணலில் வைத்து சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்த கலவையை கொட்டி நன்கு கிளறவும். அத்துடன் கருப்பு உளுந்தம்மாவை போட்டு கிளறி சிறிதளவு நெய் சேர்க்கவும்.

இப்போது மாவு வெந்ததும் அடுப்பை அணைத்து உருண்டையாக பிடிக்கவும்.

சாக்லேட் சிரப்பில் உருண்டைகளை பாதியளவு முக்கி எடுத்து பரிமாறவும்.

குழந்தைகளின் எலும்பை வலுவாக்கும் கருப்பு உளுந்து லட்டு தயார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *