Connect with us

இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்

Published

on

இலங்கைக்கு எதிராக 22 நாடுகள் வாக்களித்தன .இந்தியா உட்பட்ட 14 நாடுகள் நடுநிலை வகித்தன .இலங்கைக்கு ஆதரவாக 11 நாடுகள் வாக்களித்தன .

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் கனடா, ஜேர்மன், வட மசிடோனியா, மொன்டனீக்ரோ, மலாவி மற்றும் ஐக்கிய இராயச்சியம் ஆகிய நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை முன்வைத்தன. அந்த தீர்மானத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல காரணிகள் குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தன.

எவ்வாறிருப்பினும் குறித்த தீர்மானத்தில் பல விடயங்கள் அரசியல் தேவைக்காக உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் குற்றஞ்சுமத்துதல், அவை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துதல் என்பன சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும் இலங்கை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.