Connect with us

இலங்கை

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10/= ஆல் அதிகரிப்பு

Published

on

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரிமா மற்றும் செரண்டிப் நிறுவன கோதுமை மா ஒரு கிலோவின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சமையல் எரிவாயுவின் விலையும் நேற்று நள்ளிரவு முதல் உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையிலேயே பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இது தொடர்பான இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது