Connect with us

இந்தியா

ஒரேநாளில் 36 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published

on

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 36 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

45 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

இதில் முதற்கட்டமாக 33 இலட்சத்து 65 ஆயிரத்து 597 பேருக்கும், இரண்டாவது கட்டமாக 3 இலட்சத்து 5 ஆயிரத்து 645 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் 65,19,976 பேருக்கும், குஜராத்தில் 61,65,176 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *