Connect with us

இலங்கை

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட 09 பேருக்கு கொவிட் தொற்று

Published

on

மொனராகலை விஹாரமுல்ல பிரதேசத்தில் தானம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட 09 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மொனராகலை பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 5 பேர் கொழும்பில் இருந்து வந்து தான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இதன் காரணமாக குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட 12 தேரர்கள் விகாரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.