Connect with us

இலங்கை

ஓட்டமாவடியில் டெங்கு நோயால் 84 பேர் பாதிப்பு

Published

on

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இருபதாம் திகதி வரை எண்பத்திநான்கு(84)பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். 

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் டெங்கு நோய் அதிகரித்து காணப்படும் வகையில் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. 

அந்தவகையில் மீராவோடை பிரதேசத்தில்வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளல் வேலைத்திட்டம் மேற்பார்வை பொது சுகாதாரபரிசோதகர் ஏ.எல்.நௌபர் தலைமையில் நடைபெற்றதில் பொது சுகாதார பரிசோதகர்என்.எம்.எம்.சிஹான், டெங்கு கட்டுப்படுத்தல் வெளிக்கள உத்தியோகத்தர்கள்,சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வீடு வீடாக சென்று டெங்குபரிசோதனை நடவடிக்கையின் போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளைவைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்கு பிறகு இவ்வாறு சுத்தம்இல்லாமல் இருந்தால் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும்எச்சரிக்கப்பட்டனர். 

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் ஜனவரி மாதம் முதாம் திகதி முதலாம் இருபதாம் திகதி வரை எண்பத்திநான்கு (84) பேர் டெங்கு நோயினால்பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்தேழு (27) நபர்களுக்கு வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகவும், எண்பத்தியொரு (81) நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கைவழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்தெரிவித்தார். ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் டெங்கு நோய் அதிகரிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேசசெயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, சமூகமட்ட அமைப்புக்கள் பூரண ஒத்துழைப்பினைவழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.