Connect with us

சர்வதேசம்

கலிஃபோர்னியாவில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு 100 டாலர்கள் இலவசமாக வழங்கப்படும்

Published

on

கொரோனா காரணமாக பல்வேறு உலக நாடுகளில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் அனைத்து துறைகளின் பொருளாதாராம் பெரும் சரிவை சந்தித்தது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது சுற்றுலாத்துறை எனக் கூறலாம். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு அனைத்து நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்த பெரிதும் முயற்சி செய்கின்றன.

அந்த வகையில் கலிஃபோர்னியாவில் சண்டா மரியா என்ற அழகிய பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. காண்போரை கண்கவர வைக்கும் அளவிற்கு அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த சுற்றுலாத்தலம் இது. கொரோனா பாதிப்பால் பெரும் வீழ்ச்சியை சந்தித்த இந்த சுற்றுலா தலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பகுதி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.அதனால் சுற்றுலா வரும் பயணிகளுக்கு 100 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,200 ) இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இச்சலுகை பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்மூலம் அங்கு சுற்றுலாப் பயணிகளின் வரவை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *