Connect with us

கிழக்கு செய்திகள்

கல்முனை நகரின் பிரதான சந்தைக்கு பூட்டு – பிரதான நகரம் வெறிச்சோடிப்போய் காணப்பட்டது

Published

on

கல்முனை நகரை எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தொடர்சியாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக முடக்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

கல்முனை நகரை அண்டிய பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்சியாக அதிகரித்து வருவதை அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்  (17) மாலை கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் நகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரைக்குமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட  400 க்கும் மேற்பட்ட  அன்டிஜன் பரிசோதனைகளில் 47 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக  அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது

கல்முனை நகரில் கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரைக்குமான நகர் பிரதேசத்தை  எதிர்வரும் ஞாயற்றுக் கிழமை வரைக்கும் பொதுமக்கள் நடமாற்றம் அற்ற பகுதியாக பிரகடனப்படுத்தி தொற்று மேலும் பரவுவதை கட்டுப்படுத்த  தீர்மாணிக்கப்பட்டது.
குறித்த பிரதேசத்துக்குள் அமைந்துள்ள கல்முனை பொதுச் சந்தை எதிர்வரும் மூன்று தினங்களுக்கு மூடப் படுவதுடன் குறித்த பகுதிகளில் காணப்படும் பாடசாலை, பள்ளிவாசல்கள் போன்ற அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தி சுமார் 1000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை அத்தியவசிய சேவைகள் மற்றும் பொது போக்கு வரத்துச் சேவை என்பன வழமைபோன்று நடைபெற்று வருகின்ற போதிலும் கல்முனை பிரதான நகரம் பொதுமக்கள் இல்லாமல் இன்றைய தினம்(18) வெறிச்சோடிப் போய் காணப்பட்டன.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள குறித்த பகுதிகளில்  பயணிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவுறுத்தல்களை மீறி பயணிப்போர் மீது இறுக்கமான சட்ட நடவடிக்கையை பொலிசாரல் முன்னெடுக்கப்படும். இப்பிரதேசத்தில் பொது வியாபாரங்களில் ஈடுபடுவது, பொதுமக்கள் ஒன்று கூடுவது போன்ற அனைத்து செயற்பாடுகளும்  முடக்கப்பட்டுள்ளது.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *