Connect with us

இலங்கை செய்திகள்

காக்காச்சிவட்டை கிராமோதய சிகிச்சை நிலைய தேவைகளை நிறைவேற்றுக.

Published

on

காக்காச்சிவட்டையில் சிகிச்சை நிலைய தேவை

மட்டு. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் வெல்லாவெளி சுகாதார வைத்திய அலுவலக பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவட்டை கிராமோதய சிகிச்சை நிலையம், பெளதீக ஆளணி வளக் குறைபாடுகளுடன் இயங்கி வருவதனால் சிகிச்சை பெற வருவோர் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

போரதீவுப்பற்று செயலகப்பிரிவின் பின்தங்கிய எல்லைப்புற பிரதேசங்களிலிருந்து வருவோர் இச் சிகிச்சை நிலையத்தையே பயன்படுத்துவதுடன், நீண்ட காலமாக ஒரு வைத்தியருடனும் ஒரு சில மருத்துவ மாதுக்களுடனுமே இயங்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

நிறைமாத கர்ப்பிணிகள், சிறுகுழந்தையுடனான தாய்மார்கள் சுகாதார சிகிச்சை பெற வரும் நிலையில், அவர்கள் ஆற அமரும் இடம் உட்பட சிகிச்சை வளாகம் குப்பைகுழங்கள் நிறைந்து டெங்கு நுளம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் உருவாகக்கூடிய சூழல் காணப்படுவதாகவும், மகப்பேறு நிலையிலுள்ள கர்ப்பிணிகள் மலசலகூட வசதியிருந்தும், துப்பரவற்று உபயோகிக்கக்கூடிய நிலையில் இல்லையென கவலையுடன் அங்கலாய்க்கின்றனர்.

மாதத்தில் இரு தடவை மாத்திரமே சிகிச்சை நிலையம் திறக்கப்படுவதாகவும் சடுதியாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும்போது 20 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையையே நாடுவதாகவும், சிகிச்சை வளாகம் சுற்று மதிலின்றி காணப்படுவதனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிலையத்தின் சிகிச்சை தேவை கருதி மருத்துவர், மருத்துவ மாதுக்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் போன்ற ஆளணி தேவைகளையும் பெளதீக கட்டிட வளங்களையும் நிறைவேற்றுமாறு சிகிச்சை பெறவருவோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *