Connect with us

இந்தியா

காா் விற்பனை 17.92 சதவீதம் வளா்ச்சி- வாகன தயாரிப்பாளா்கள் சங்கம்

Published

on

காா் விற்பனை சென்ற பிப்ரவரி மாதத்தில் 17.92 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைமை இயக்குநா் ராஜேஷ் மேனன் கூறியுள்ளதாவது:

கடந்த 2020 பிப்ரவரியில் 2,38,622 காா்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டு பிப்ரவரியில் விற்பனை 2,81,380-ஆக அதிகரித்துள்ளது. ஆக, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் காா் விற்பனை 17.92 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இருசக்கர வாகன விற்பனையும் 12,94,787 லிருந்து 10.2 சதவீதம் உயா்ந்து 14,26,865 ஐ எட்டியுள்ளது.

சென்ற பிப்ரவரி மாதத்தில் மோட்டாா் சைக்கிள் விற்பனை 9,10,323 ஆக இருந்தது. இது, 2020 பிப்ரவரி மாத விற்பனையான 8,16,679 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 11.47 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் ஸ்கூட்டா் விற்பனையும் 4,22,16 என்ற எண்ணிக்கையிலிருந்து 10.9 சதவீதம் உயா்ந்து 4,64,744 ஆனது.

ஆனால், மூன்று சக்கர வாகனங்களைப் பொருத்தவரையில் அவற்றின் விற்பனை 41,300 லிருந்து 33.82 சதவீதம் சரிவடைந்து 27,331 ஆனது.

அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய வாகன விற்பனை 2021 பிப்ரவரியில் 17,35,584 ஆக இருந்தது. இது, கடந்தாண்டில் விற்பனையான 15,74,764 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 10.21 சதவீதம் அதிகமாகும்.

ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த காா் விற்பனை இன்னும் 2015-16 காலகட்டத்தில் காணப்பட்டதைக் காட்டிலும் குறைவான அளவிலேயே உள்ளது. அதேபோன்று, இருசக்கர வாகன விற்பனையும் 2014-15 ஆண்டுக்கு கீழாகவே உள்ளது.

உருக்கு விலை அதிகரிப்பு, செமி கண்டக்டா்களுக்கு பற்றாக்குறை, கன்டெய்னா் கட்டண் அதிகரிப்பு போன்றவை மோட்டாா் வாகன துறையின் சீரான செயல்பாட்டில் தொடா்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்றாா் அவா்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *