Connect with us

இலங்கை

குணமடைந்தவர்களின்எண்ணிக்கை 62 ஆயிரத்து 594 ஆக அதிகரிப்பு

Published

on

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 1,113 பேர் நேற்று (06) வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 594 ஆக அதிகரித்திருக்கிறது.

இதேவேளை , ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ‘அஷ்ட்ரா செனெக்கா’ கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு இலக்கான 726 பேர் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். இவர்களுள் 383 பேர் பேலியகொட கொவிட் கொத்தணியைச் சேர்ந்தவர்களாவர். பேலியகொட கொவிட் கொத்தணியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 192 இல் இருந்து 64 ஆயிரத்து 575 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொரோனா  தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 68 , 576

இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை நேற்று 351 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (06) 08 பேர் மரணித்துள்ளனர் இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 193 ஆக அதிகரித்திருக்கிறது.