Connect with us

அழகு குறிப்புகள்

குதிகால் வலி பெண்களே, உஷார்

Published

on

குதிகால் எலும்பினை சுற்றி காலின் தசை
நார்கள், ஜவ்வுகள், ஜெல்லி போன்ற திசுப்
பைகள், கொழுப்பு, திசுக் கொத்து போன்ற

அனைத்தும் அமைந்திருக்கும். இந்த
திசுக்களில் ஏதேனும் அழற்சி, காயம்
ஏற்பட்டால் வலி வரக்கூடும். இது
இல்லாமல் குதிகால் எலும்பின் மீது
கால்சியம் (சுண்ணாம்பு) படிந்து, இறுகி
எலும்பு போல் ஆவதாலும் வலி வரக்கூடும்.

வலி எதனால் வருகிறது..?

*அதிக உடல் எடையின் காரணமாக
குதிகால்களுக்கு அழுத்தம் அதிகரிப்பதால்.
*நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்கும்
வேலை செய்பவர்களுக்கு.
*ஹீல்ஸ் காலனி அதிக நேரம் மற்றும்
நீண்ட காலம் பயன்படுத்துவோருக்கு
காலின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதால்.

*கட்டையான வகை காலணிகள்
அணிந்தால்.
*அதிக கால்சியம் சத்து குதிகால் எலும்பின்
அடியில் படிந்து இறுகிவிடுவதால்
நடக்கும்போது அழுத்தம் ஏற்பட்டு வலி
உண்டாவது.
*சிலருக்கு குதிகால் எலும்பில் கூடுதலாக
எலும்பு வளரும் போது.
*போதிய உடற்பயிற்சி இல்லாமல்
இருப்பதாலும், கால்களை பராமரிக்காமல்
இருப்பதும் கூட காரணங்களாக அமைகிறது.

யாருக்கு அதிகமாக வரும்..?

*பெண்களுக்கும் ஆண்களுக்கும் வரும்
என்றாலும் அதிக அளவில் பெண்

களையே பாதிக்கிறது என புள்ளி விவரம்
சொல்கிறது.
*விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள்
சரியாக, முறையாக பயிற்சிகள் செய்யாமல்
இருந்தால் நாளடைவில் வலி வரக்கூடும்.
*40 வயதை கடந்த ஆண், பெண் இருவரும்
பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

அறிகுறிகள்..?

*ஆரம்பத்தில் அதிக நேரம் நின்று வேலை
செய்தால் மட்டுமே வலி வரும்.
*நாளடைவில் காலையில் எழுந்தவுடன்
கால்களை தரையில் வைத்து நடக்கும்
போது லேசான வலி உண்டாகும்.

*பின் அதுவே கடுமையான வலியாக மாறும்
என்பதால் கால்களை தரையில் வைக்கவே
பயம் வரும். பின் 5 முதல் 10 நிமிடங்கள்
கழித்து வலி குறைந்துவிடும்.
*வலியுடன் சிலருக்கு வீக்கம் ஏற்படலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *