Connect with us

இலங்கை

கொரோனா காலத்தில் சேவையாற்றிய உயர் பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு

Published

on

ஓட்டமாவடி தேர்டீன் இளைஞர்; கழகத்தின்ஏற்பாட்டில் கொரோனா காலத்தில் சிறந்த முறையில் சேவையாற்றிய பொலிஸ் உயர் அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு மீராவோடை கலாசார மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. 

சமூகசேவையாளர் கலாநிதிஎம்.பி.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ்அத்தியட்சகர் ஜி.எஸ்.ஜெயசுந்தர, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜயபெரமுன, மீராவோடை தாருஸ்ஸலாம் அதிபர் மௌலவி ஏ.எல்.எம்.ஹனிபா, இளைஞர்பாராளுமன்ற உறுப்பினர், இளைஞர் கழக தலைவர் எம்.சஜித், கழக உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

 இதன்போது வாழைச்சேனை பொலிஸ்பிரிவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரதேசம் தனிமைப்படுத்தலில் இருந்துபோது மக்களின் பாதுகாப்பு கருதி திறம்பட சேவையாற்றியதுடன், பொலிஸ் பிரிவில் காணப்படும்போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும் திறம்பட சேவையாற்றிய பொலிஸ் உயர்அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர். 

இதில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ்அத்தியட்சகர் ஜி.எஸ்.ஜெயசுந்தர, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜயபெரமுன, போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.துசிதகுமார ஆகியோருக்குநினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கழக உறுப்பினர்களுக்கும் நினைவுப்பொருள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.