Connect with us

இலங்கை

கொரோனா தொற்றுக்குள்ளான வவுனியா பெண் மரணம்

Published

on

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இன்று மாலை மரணமடைந்துள்ளார்.

வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த புதன் கிழமை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அவரை மேலதிக சிகிச்சைக்காக கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை அனுராதபுரம் மித்சிறிசெவன் வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர் வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய குடும்ப பெண் ஆவார்.

இதேவேளை, காலை முதல் வவுனியா வைத்தியசாலையின் சில பகுதிகளும், பெரிய உலுக்குளம் பகுதியும் சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது.