Connect with us

இலங்கை

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம்-இந்தியா மற்றும் ஜப்பானுக்கு கொடுத்த இலங்கை

Published

on

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை, இந்தியாவின் அதானி நிறுவனம், ஜப்பான் முதலீட்டாளர், ஜோன் கீல்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியன இணைந்து முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தின் ஒரு பகுதி ஏற்கனவே சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இப்போது மேற்கு முனையம் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு வழங்கப்பட்டுள்ளது சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது.

இந்தியா மற்றும் ஜப்பான் இந்த முனையத்தை எவ்வாறு இணைந்து கட்டுப்படுத்தும் அல்லது பிரித்துக்கொள்ளும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களாக 35 ஆண்டு கால வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.