Connect with us

இலங்கை

கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களின் முழு விபரம்

Published

on

கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

317 மத்திய நிலையங்களில் நேற்றும் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதுவரை ஒரு கோடி 17 இலட்சத்து 68 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னர் ஒன்றரை கோடி மக்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.

இதேவேளை ´கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் வழங்கிய 7 இலட்சத்து 28 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்று நாட்டிற்கு தருவிக்கப்பட்டன.

´அஷ்ட்ரா செனேக்கா´ தடுப்பூசியை முதலாவத டோசாக ஏற்றிக்கொண்டவர்களுக்கு நேற்று தருவிக்கப்பட்ட தடுப்பூசிகள் இரண்டாவது டோசாக ஏற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜப்பான் அன்பளிப்பு செய்யும் எஞ்சிய தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கைக்க கிடைக்கவுள்ளன.