Connect with us

அறுசுவை

கோதுமை ரவை பாயாசம்

Published

on

தேவையான பொருட்கள்

*நெய் – 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்

* கோதுமை ரவை – 1/2 கப்

* ஜவ்வரிசி – 1/4 கப்

* தண்ணீர் – 1.5 கப்

* வெல்லம் – 1 கப்

* தேங்காய் பால் – 2 கப்

* ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

* முந்திரி – 10

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையைப் போட்டு 2 நிமிடம் வறுத்து இறக்கிக் கொள்ளவும். * பின் ஒரு குக்கரில் வறுத்த கோதுமை ரவை, ஜவ்வரிசி மற்றும் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். * விசில் போனதும், ஒரு வாணலியில் வேக வைத்துள்ள கோதுமை ரவையை ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, 5-10 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். * பின்பு அதில் தேங்காய் பாலை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கவும். * இறுதியில் மற்றொரு சிறு வாணலியில் நெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும், அதில் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி கிளறினால், சுவையான கோதுமை ரவை பாயாசம் தயார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *