Connect with us

இலங்கை

கோவிட் பெருந்தொற்று நிலைமைகள் நீடித்தாலும் பரீட்சைகளை நடத்துவது கைவிடப்படமாட்டாது

Published

on

இலங்கையில் பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் தரம் 5 புலமைப் பரீட்சை, க.பொ.த.உயர் தர பரீட்சை, க.பொ.த. சாதாரண தர பரீட்சை என்பன திட்டமிட்டவாறு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் – 19 பெருந்தொற்று நிலைமைகள் காணப்பட்டாலும் அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என
கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை என்பன இந்த ஆண்டில் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோவிட் பெருந்தொற்று நிலைமைகள் நீடித்தாலும் பரீட்சைகளை நடத்துவது கைவிடப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *