Connect with us

சர்வதேசம்

சராசரியாக 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் நாளாந்தம் அடையாளம்-மே மாத இறுதிக்குள் முதியவர்கள் பெற்றுக்கொள்ள போதுமான அளவு தடுப்பூசிகள் இருக்கும்

Published

on

மே மாத இறுதிக்குள் முதியவர்கள் பெற்றுக்கொள்ள போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்காவில் இருக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

முன்னர் எதிர்பார்த்ததை விட இரண்டு மாதங்கள் முன்னதாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் புதிய மாறுபாடுகள் தொடர்பான கவலைகள் காணப்படும் நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

இருப்பினும் சில மாநிலங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அவரது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டாலும் சராசரியாக 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்றனர்.

பைடன் ஆட்சிக்கு வந்து முதல் 100 நாட்களில் 100 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் அமெரிக்கா தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *