Connect with us

இலங்கை

சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தில் “வீட்டுக்கு வீடு சுய தனிமைப்படுத்தல்”

Published

on

சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தில்  நேற்றிலிருந்து (15) மறு அறிவித்தல் வரை மாலை 8 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை  “வீட்டுக்கு வீடு சுய தனிமைப்படுத்தல்” நடவடிக்கை சுகாதார துறையினர், விசேஷட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் பிரதான வீதிகளில் மற்றும் உள் வீதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் மாலை 8 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை மூடிவிடுவதுடன் பின்னர் வீட்டிலிருந்து வெளியேறுவதையும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்கு பின்னர் கடற்கரை பிரதேசத்தில் மற்றும் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுதலும் மீன் சந்தைகளில் ஒன்று கூடுதல் வீதிகளில் மூன்று பேர் கொண்டு மோட்டார் வண்டியில் உலாவுதல் குறிப்பாக இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சமூக விரோத செல்களில் ஈடுபடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. 

இவ் வேண்டுகோளினை மீறும் பட்சத்தில் சுகாதார துறையினர், விசேஷட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற் கொள்ளும் சட்ட நடவடிக்கையுன் குறித்த நேரங்களில் வெளியே சுற்றி திரிகின்றவர்களுக்கும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர் அனைவரும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியினால் திடீர் “அன்டிஜன்” பரிசோதணை மேற் கொள்ள வேண்டி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தனிமைப்படுத்தல் ஏற்பாட்டினை சாய்ந்தமருது-மாளிகைக்காடு கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலனியின் சார்பாக சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜூம்மா பெரிய பள்ளிவாசல் இணைந்து மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.