Connect with us

இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது முடக்கும் அபாயம் உள்ளது

Published

on

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரக் கூட்டம் இன்று சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம். அஜ்வத்  தலைமையில் இடம் பெற்றது.
இங்கு உரையாற்றிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம். அஜ்வத் தனது உரையில், நாட்டு நிலமை மிக மோசமாக உள்ளது.  அக்கறைப்பற்றுக்கு அடுத்ததாக சாய்ந்தமருதும் தொற்றுக்கு அதிகம் முகம் கொடுக்கும் ஊராக மாற அதிக வாய்ப்புள்ளது.
இது தொடர்ந்தால் தொற்றாளர்கள் அதிகரித்து சாய்ந்தமருது, கல்முனைப் பிரதேசமும் முடக்கம் செய்யப்படும்  சாத்தியம் அதிகமாகவுள்ளது.
இதைத் தடுக்க எங்களோடு சேர்ந்து பணியாற்ற மக்கள் முன்வர வேண்டும். கிராமிய மட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தொண்டர்கள் எங்களுக்கு உதவ வேண்டும் சாய்ந்தமருது பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தாக்கம் உக்கிரமடைந்து வருகிறது, இதனைக் கட்டுப்படுத்துதலும் எங்களையும் எமது ஊர் மக்களையும் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரினதும் கட்டாயக் கடமை என்றார்.
தொடர்ந்தும் உரையாற்றிய பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உரை நிகழ்த்தும் போது நாம் நேரம் காலம் பாராது வேலை செய்கிறோம். கிராம சேவை அதிகாரிகளும் எங்களுக்கு ஒத்துழைப்புத் தருகிறார்கள். பொலிசாரின் ஒத்துழைப்பும் கிடைக்கிறது.
எது எப்படியோ பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நாம் இந்த நோய்த் தொற்றில் இருந்து நமது மக்களை மீட்டெடுக்கலாம்.தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்தல்,சிறுவர்கள், பெரியவர்கள் வெளியேறுதலை முற்றாகத் தவிர்த்தல்,வீதிகள், தெருக்கள், சந்திகளில் மைதானங்களில் தேவையின்றிக் கூடுதல் விளையாடுதல் என்பனவற்றை தவிர்த்தல், வெளியே செல்லும்போது முகக் கவசம்அணிந்து செல்லுதல்,எந்த நிலையிலும் 5 அடி சமூக இடைவெளி பேணிக் கொள்ளல், கொரோனா வைரஸ்அதிகமுள்ள அபாய பிரதேசங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்தல், அடிக்கடி இரு கைகளையும் சவர்க்காரமிட்டு நன்றாகக் கழுவுதல், வேறு பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள்,போகிறவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்களாகியவர்கள் உரிய அதிகாரிகள், கிராம சேவகர்கள், சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
முக்கிய சுகாதார நோய்த் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டதுடன் இந்தத் திட்டத்துக்காக பொலிஸ் மற்றும் முப்படையினர், சுகாதார திணைக்களத்தினைச் சேர்ந்த சேவைக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதனையும்
அறியத் தருவதுடன் இதுக்காக எல்லோரினது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டார்
இந்த நிகழ்வில் கிராம சேவை அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமிய மட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விழிப்புனர்வு உறுப்பினர்கள் அத்துடன் சாய்ந்தமருது பிரதேச பொது சுகாதார பரிசோதாகர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.