Connect with us

இலங்கை

சிறுபான்மை சமூகத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே மாகாணசபை: அந்த உரிமையை இழக்க முடியாது! மஸ்தான் எம்.பி

Published

on

சிறுபான்மை சமூகத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாகவே மாகாணசபை வந்தது. எனவே அந்த உரிமையை நாம் இழக்க முடியாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைகள் தொடர்பில் ஒவ்வொருவரும் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர்களது தனிப்பட்ட கருத்துக்கள். மாகாணசபைகள் இயங்க வேண்டும். சிறுபான்மை சமூகத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாக மாகாண சபைகள் அப்போது வந்தன. இருக்கும் அந்த உரிமைகளை நாம் இழக்க முடியாது. கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட தேர்தல் முறை மாற்றம் தான் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. விரைவாக இந்த அரசாங்கத்தால் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும்.
கட்சித் அதலைவர்களின் விருப்பதுடன் மாகாண சபை செயற்படுத்தப்படும். அது இல்லாமல் போகாது. எமது அரசாங்கம் வந்து மூன்று மாதங்கள் தான். ஆனால் அதற்கு முதல் ஒன்றரை வருடங்களாகவே மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை. ஆகவே காலதாமதம் ஏற்படுமே தவிர, மாகாண சபை தேர்தல் இல்லாமல் போகாது.
இது தவிர, 185 நாடுகளில் இறந்தவர்களின் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் இருந்து இங்குள்ள சுகாதார பிரிவினர் அடக்கம் செய்தாலும் வைரஸ் பரவும் எனக் கூறுகிறார்கள். அது ஒரு பெரும் பிரச்சனை. இது பல்லின நாடு. இங்கு பல இனங்கள் இருக்கிறது. அவர்களுடைய மத சுதந்திரத்தை வழங்க வேண்டும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்வது தான் மரபு. அந்த உரிமை கிடைக்க வேண்டும். கொரோனா ஏற்பட்டத்தில் இருந்து இறந்தவர்களை எரிப்பதால் அந்த சமூகம் பாதிப்படைந்துள்ளது. அவர்களது மதக் கடமைக்கு பாரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
நாங்கள் ஆளும் தரப்பு எம்.பி என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக பேசி வருகின்றோம். இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நிபுணத்துவ குழு மற்றும் அரச தலைவர்களுடன் பேசி வருகின்றோம். இந்த நிலமைகளை மாற்றி அடக்கம் செய்யும் நிலைக்கு கொண்டு வர முயற்சிகிறோம். அதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தவர்கள் இனியும் காலத்தை இழுத்தடிக்க முடியாது என்பதால் அரசாங்கத்திற்கு உணர்த்துவதநற்காக ஜனநாயக ரீதியாக போராடுகிறார்கள். மக்கள் அரசியல் ரீதியாக முடிவெடுக்குமாறு வலியுறுத்துகிறார்கள்.
அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. முழுமையாக இஸ்லாமியரும், கிறிஸ்தவரும், பௌத்த மக்களின் ஒரு பிரிவினரும் பாதிப்கப்பட்டுள்ளார்கள். உலக சுகாதார ஸ்தாபனம் கூறும் விடயங்களை பார்க்கிறார்கள். ஆனால் இந்த விடயத்தில் பார்க்கவில்லை என்பது தான் எமது ஆதங்கம். ஏனைய சமூகத்தின் ஆதங்கங்களை புரிந்து உரிமைகளை அரசு வழங்க வேண்டும் என அரசுடன் பேசி வருகின்றோம். எனவே எதிர்காலத்தில் மையங்களை அடக்கம் செய்யும் நிலைமை வரும் என நம்புகின்றோம் என்றார்.