Connect with us

சர்வதேசம்

சீரம் மற்றும் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு அனுமதி

Published

on

சீரம் மற்றும் ஒஃக்ஸ்போர்ட் நிறுவனத்தின் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிக்கு பிரேஸில் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்ததையடுத்து பிரேஸில் சுகாதார கட்டுப்பாடு ஆணையம் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து இணையதள கலந்துரையாடலில் பேசிய பிரேசில் சுகாதார கட்டுப்பாட்டு ஆணைய தலைமை இயக்குநர் கஸ்டாவோ மென்டிஸ் கூறுகையில்,

‘அஸ்ட்ராஸெனெகாவின் இறுதி கட்ட ஆய்வு தரவுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததை அடுத்து அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பிரேஸிலின் பியோகிரஸ் நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி தயாரிப்பு பணியை தீவிரப்படுத்த முடிவு செய்து உள்ளோம்’ என கூறினார்.

ஏற்கனவே சீரம் நிறுவனத்தின் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பிரேசிலில் அவசர கால தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிரேஸிலில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக பிரேஸில் மாறியுள்ளது.