Connect with us

இலங்கை

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காசோலை வழங்கிவைப்பு.

Published

on

கல்முனை பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காசோலைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று(11.03.2021) சுவாட் நிறுவனத்தின் கல்முனை பிரதேச அலுவலகத்தில் முகாமையாளர் திருமதி. பாலசிங்கம் ருக்ஸாந்தி தலைமையில் நடைபெற்றது.

நட்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பாண்டிருப்பு, பெரியநீலாவணை கிராமங்களை சேர்ந்த 33 பயனாளிகளுக்கு சுயதொழில்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 4190000.00 ரூபா பெறுமதியான  காசோலைகள் கடனாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரான திருமதி ந.நந்தினி, அவர்களும் பயிற்சி .அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.எம் தஜ்மில் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர். பயணாளிகள் நிறுவனத்தில் மேற்கொள்ளும் சேமிப்பை அடிப்படையாக கொண்டே இந்த சுய தொழில் கடன் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.