Connect with us

சர்வதேசம்

சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன்

Published

on

 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் கோப்பை வென்றார். பைனலில் ரஷ்யாவின் மெட்வெடேவை தோற்கடித்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ் மோதினர். ஒரு மணி நேரம், 53 நிமிடம் நீடித்த போட்டியில் ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார்.

இது, ஆஸ்திரேலிய ஓபனில் இவரது 9வது (2008, 2011-13, 2015-16, 2019-21) பட்டம். தவிர இவர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது 18வது பட்டத்தை தட்டிச் சென்றார். ஏற்கனவே பிரெஞ்ச் ஓபன் (2016), விம்பிள்டன் (2011, 2014-15, 2018-19), யு.எஸ்., ஓபனில் (2011, 2015, 2018) கோப்பை வென்றிருந்தார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *