Connect with us

இலங்கை

ஜூலை மாதம் 31ஆம் தேசிய விளையாட்டு தினமாக பிரகடனம்

Published

on

இலங்கையில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 31ஆம் திகதியை, தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜீலை மாதம் 31ஆம் திகதியை இலங்கையின் தேசிய விளையாட்டு தினமாக அறிவிப்பதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அமைச்சரவையில் யோசனையொன்றை முன்வைத்தார். ஒலிம்பிக் போட்டியில் 400 மீPட்டர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் டங்கன் வைட் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்று தந்து புகழ்சேர்த்த ஜீலை 31ஆம் திகதி இவ்வாறு தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

விசேட பொருள் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சேர்ப்பு நடவடிக்கையினை செயற்றிறன் மிக்கதாக முன்னெடுப்பதன் தேவை குறித்து கடந்த வரவு செலவு திட்டத்தில் சுட்;டிக்காட்;டப்பட்டது. அதற்கமைய இது தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. அதன் கீழ் மதுபானம், சிகரட், வாகனம், தொடர்பாடல் உள்ளிட்ட பல துறைகளுக்கு பொருள் மற்றும் சேவை வரி அறவிடும் நடவடிக்கை இலகுவாக்கப்படவுள்ளது.

புதிய தொழில் முனைவோராக தொழிற்துறைக்குள் நுழைகின்ற இளைஞர் யுவதிகளுக்காக புதிய அபிவிருத்தி நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய குறித்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென இளைஞர் அபிவிருத்தி லொத்தர் ஒன்று ஆரம்பிக்க யோசனை முன்வைக்கப்பட்டு:ள்ளது. நிதியத்தை பாராளுமன்ற சட்டத்த்pன் ஊடாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதோடு இது தொடர்பான சட்டமூலங்களை தயாரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.