Connect with us

சர்வதேசம்

ஜோ பைடன் உயிருக்கு ஆபத்து?

Published

on

அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், நாளை பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் சமீபத்தில், ‘கேப்பிடோல்’ எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.’பதவியேற்பு விழா நடக்கும் நாளில் அல்லது அதற்கு முன், டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடலாம்’ என, அமெரிக்காவின் உளவு அமைப்பான, எப்.பி.ஐ., எச்சரித்துள்ளது. அதனால், வழக்கத்தைவிட அதிக அளவு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, டிரம்பின் ஆதரவாளர்கள் சிலரால், அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்’ என, தகவல் பரவியுள்ளது. அதனால், ராணுவ அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ராணுவ அமைச்சர் ரயான் மெக்காத்தி, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள, 25 ஆயிரம், ‘நேஷனல் கார்ட்’ எனப்படும் அதிரடிப் படையினர் குறித்த தகவல்களை ஆராய, எப்.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *