Connect with us

சர்வதேசம்

டிரம்ப் கொள்கை தொடரும்

Published

on

இந்தோ – பசிபிக் பிராந்திய நாடுகளுடனான உறவு குறித்து, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்பின் கொள்கைகளை தொடர உள்ளோம், என, அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவான் கூறியள்ளார்.

அமெரிக்கா அமைதி மையத்தின் சார்பில், வாஷிங்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அந்த நாட்டின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் கலிவான் பேசியதாவது:அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய, ‘குவாட்’ எனப்படும் கூட்டமைப்பு, 2017ல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்த கூட்டமைப்பு, போர் பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. ஆதரவுபல்வேறு துறைகளிலும், இந்த நாடுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன.

இந்தோ – பசிபிக் பிராந்தியம் தொடர்பாக, புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் கொள்கை, இந்த கூட்டமைப்பின் அடிப்படையிலேயே இருக்கும்.அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நடந்தபோது, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் உடனான உறவை, அப்போது அதிபராக இருந்த டிரம்ப் புதுப்பித்தார். அதற்கு, அப்போதே, ஜோ பைடன் ஆதரவு தெரிவித்தார்.விதைஅதனால், இந்தோ – பசிபிக் பிராந்தியம் தொடர்பாக, டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளையே, ஜோ பைடன் நிர்வாகம் தொடரும்.