Connect with us

சர்வதேசம்

டிரம்ப் வக்கீல்கள் விலகல்

Published

on

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் மீதான விசாரணை, அடுத்த வாரம் நடக்கவுள்ள நிலையில், அவரது வழக்கறிஞர்கள் இருவர், வழக்கில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபராக, ஜோ பைடன், சமீபத்தில் பதவியேற்றார். முன்னதாக, அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, பார்லியின் கூட்டுக் கூட்டம், கடந்த மாதம் நடந்தது.அதிபராக இருந்த, டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், ‘கேப்பிடோல்’ எனப்படும், பார்லிமென்ட் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.வன்முறையைத் துாண்டியதாக, டிரம்ப் மீது, கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பிரதிநிதிகள் சபையில் அது நிறைவேறியது. செனட் சபையில், வரும், 8ல் விசாரிக்கப்பட உள்ளது.

இந்த விசாரணையின் போது, முன்னாள் அதிபர் டிரம்ப் தரப்பில், வழக்கறிஞர்கள் பட்ச் போவர்ஸ் மற்றும் டெபோரா பார்பியர் ஆகியோர் ஆஜராவதாக இருந்தது.வழக்கு தொடர்பாக, டிரம்ப்புடன் வழக்கறிஞர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் இருந்து, அவர்கள் விலகியுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, வழக்கறிஞர்கள் தரப்பில் அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்த விலகல் குறித்து, அமெரிக்காவின், சி.என்.என்., செய்தி வெளியிட்டு உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *