Connect with us

சினிமா

தமிழர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ‘தி பெமிலி மேன் 2’ வெளியானது!

Published

on

தமிழர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ‘தி பெமிலி மேன் 2’ இணையத் தொடர் திடீரென அமெசன் பிரைம் தளத்தில் வெளியாகியிருக்கிறது.

முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த இணையத் தொடரில் தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்தத் தொடரின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகிய நிலையில், அதில் சமந்தா தற்கொலைக் குண்டுதாரியாக நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த தொடர் தமிழர்களைத் தீவிரவாதிகளாகவும் வன்முறையாளர்களாகவும் காட்டும் வகையிலும் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தியும் காட்சியமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, இது திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதனை இணையத்தில் வெளியிடக்கூடாது என்றும் தமிழர் தரப்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

அத்துடன், இந்தத் தொடரை வெளியிடுவதைத் தடைசெய்ய வேண்டுமென தமிழக அரசு சார்பாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

என்னும், மத்திய அரசு பதிலளிக்காத நிலையில் ‘தி பெமிலி மேன் 2’ தொடர் திடீரென இணையத்தில் வெளியாகியுள்ளமை பலரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *