Connect with us

இலங்கை

தமிழ் விவசாயிகளை மோசமாக அழிக்கப்படும் நிலை காணப்படுகின்றது: கஜேந்திரன் எம்.பி

Published

on

தமிழ் விவசாயிகளை மோசமாக அழிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. எங்களுடைய விவாசாயிகள் பந்தாடப்படுகிறார்கள். அவர்களது நிலங்கள் பறிக்கப்படுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, ஆசிகுளம் பிலவு குடியிருப்பு மக்களின் காணிகள் வனவளத் திணைக்களத்தால் அபகரிக்கப்படுகின்றது. இது மக்களின் உரிமையை மீறும் செயற்பாடு. இது தொடர்பில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது எமக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனை நாம் அமைச்சின் ஆலோசனை கூட்டத்திலும் பதிவு செய்துள்ளோம். இது தொடர்பாக கவனம் செலுத்தி மக்களின் காணிகளை மீட்டு மக்களுக்கு வழங்குவோம் என அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் இன்று வரை அது நடைபெறவில்லை. இதனால் மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஜனாதிபதி ஒரு புறத்தில் தாம் விவசாயிகளைப் பாதுகாப்பதாக பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதாக காட்டுகின்றார். அவை சிங்கள பெரும்பான்மை இனத்தின் பொருளாதாரத்தை பெருக்கும் நோக்கில் இருக்கின்றதே தவிர, தமிழ் விவசாயிகள் மோசமாக அழிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. வவுனியா மட்டுமன்றி கிழக்கிலும் இந்த நிலை தான் உள்ளது. எங்களுடைய விவாசாயிகள் பந்தாடப்படுகிறார்கள். அவர்களது நிலங்கள் பறிக்கப்படுகின்றது. வன இலாகா திணைக்களம், பறவைகள் காப்பகம், தொல்பொருள் திணைக்களம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அதிகார சபை என அனைத்து திணைக்களங்களும் தமிழர்களது நிலங்களை கபளீகரம் செய்து தமிழ் விவசாயிகளை பலவந்தமாக வெளியேற்றி தமிழ் விவசாயிகளின் பொருளாதாரத்தை அழிக்கும் செய்பாட்டில் இருக்கின்றன. இதனை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. இந்த மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அவர்களது காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதுவரை அந்த மக்களுக்காக நாம் இணைந்து பணியாற்றுவோம் எனத் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *