Connect with us

இலங்கை

தற்காலிக சுகாதார உதவியாளர்கள் 62 பேருக்கு நியமன கடிதம்

Published

on

யாழ்ப்பாணம்- போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு, நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2 வருடங்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில், தற்காலிக சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றி வந்த 62 பேருக்கே சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது.

குறித்த நியமன கடிதங்கள் சுகாதார உதவியாளர்களுக்கு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.